Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தை அடுத்து விசாகப்பட்டினத்தை குறி வைக்கும் நியூட்ரினோ திட்டம்...! - மத்திய அரசின் அடுத்த ப்ளான்!!

nutrino project in visakhapatnam
nutrino project in visakhapatnam
Author
First Published Jun 15, 2017, 12:14 PM IST


தமிழகத்தில் அமைக்கப்படவிருந்த நியூட்ரினோ திட்டம் ஆந்திர மாநிலத்துக்கு மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தேனி மாவட்டம், பொட்டிபுரத்தில் நியூட்டினோ ஆய்வகம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

அதுமட்டுமன்றி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

nutrino project in visakhapatnam

இதைத் தொடர்ந்து, நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதியளித்ததை ரத்து செய்து தேசிய தென்மண்டல பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், நியூட்ரினோ திட்டத்தை இடமாற்றம் செய்யப்படுவதாக, அதன் இயக்குநர் விவேக் டாடர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆய்வகம், தமிழகத்தில் இருந்து, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கொத்தாபெல்லாம் என்ற இடத்தில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios