Nota votes in Goa election
‘நோட்டா’வுக்கு கோவாவில் அதிக ஓட்டு
ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், கோவாவில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவானதாக தெரியவந்துள்ளது.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
இதில் உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கிறது. கோவா மற்றும் மணிப்பூரில் காங்கிரசும் பா.ஜ.க.வுக்கு இடையே கடும் போட்டி உள்ளது. உத்தரகாண்டில் 1 சதவீதம், உத்தர பிரதேசத்தில் 0.9 சதவீதம், பஞ்சாப் மாநிலத்தில் 0.7 சதவீதம், மணிப்பூரில் 0.5 சதவீதம் நோட்டாவுக்கு வாக்குகள் பதிவாகி உள்ளது.
வாக்கு எண்ணிக்கையில் பிற்பகல் நிலவரப்படி, யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நோட்டாவுக்கு பதிவான வாக்குகளில் கோவா முதலிடத்தில் உள்ளது. கோவா மாநிலத்தில் 1.2 சதவீத வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
