நகைகளின் இருப்பு குறித்து தெரிவிக்கக் கோரி கேரளாவின் புகழ்பெற்ற சோட்டானிக்கரை பகவதிஅம்மன் கோயிலுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கொச்சி ேதவசம் போர்டு நிர்வாகத்தில் சோட்டானிக்கரை பகவதிஅம்மன் கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்துசெல்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 8-ந்தேதி பிரதமர் மோடி, ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என அறிவித்தார். அதைத்தொடர்ந்து சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில் நிர்வாகம், தங்கத்திலான அம்மன் உருவம் பொறித்த ‘டாலர்கள்’ மொத்தமாக விற்பனை செய்துள்ளது. இதைத் தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், யாரிடம் இந்த தங்க டாலர்களை கொள்முதல் செய்தார்கள் என்ற விவரமும் கோரப்பட்டுள்ளது.
இது குறித்து கோயில் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “ வருமான வரித்துறை கோயிலில் உள்ள நகைகளின் இருப்பு குறித்து மட்டுமே தெரிவிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்'' என்று தெரிவித்தனர்.
