notice for 2000 cbse school
மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் உள்ளிட்ட சில தகவல்களை வெளிப்படையாகக் கூறாத 2 ஆயிரம் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி சி.பி.எஸ்.இ. வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விதிமுறைகளின்படி, அனைத்து சி.பி.எஸ்.இ.பள்ளிகளும் தங்கள் பள்ளிகளில் இருக்கும் தண்ணீர் குழாய்கள், குடிநீர் வசதிகள், வை-பை வசதிகள், அதன் வேகம், ஒவ்வொரு வகுப்புக்கும் கல்விக்கட்டணம், மாணவர் சேர்க்கை விவரம், கையிருப்பு பணம் மதிப்பு, வரவு செலவு அறிக்கை ஆகியவற்றை வெளிப்படையாக அளிக்க வேண்டும்.

இந்த தகவல்களை ஆன்-லைன் மூலம் சி.பி.எஸ்.இ.வாரியத்தின் இணையதளத்தில் பதிவு ஏற்றம் செய்ய வேண்டும். இது தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், இந்த விதிமுறையை 2 ஆயிரம் பள்ளிகள் பின்பற்றாமல் தகவல்களை தெரிவிக்காமல் இருந்துள்ளன. இதையடுத்து அந்த பள்ளிகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சி.பி.எஸ்.இ. வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய விவரங்களை 2 ஆயிம் பள்ளிகள் தெரிவிக்கவில்லை. அந்த பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்தபள்ளிகளுக்கு நாங்கள் வழங்கும் இறுதி வாய்ப்பாகும். இதை பயன்படுத்தாவிட்டால், ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும், அரசு விதித்துள்ள கட்டணத்தை மட்டுமே மாணவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதிலும் விதிமுறை மீறல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.
