நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே பயன்படுத்தப்படும், வாக்குச்சீட்டு முறைக்கு மாறும் எண்ணமே இல்லை என இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே பயன்படுத்தப்படும், வாக்குச்சீட்டு முறைக்கு மாறும் எண்ணமே இல்லை என இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் ஓட்டுச்சீட்டு முறைக்கு பதிலாக மின்னணு வாக்கு எந்திர முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்னும் இதன் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. ஆகையால் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்த குற்றச்சாட்டுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பலமுறை மறுத்து வருகின்றது.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி சுனில் அரோரா, மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கான ஒப்புகைச் சீட்டு முறையும் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றார்.
இதுதொடர்பாக, அரசியல் கட்சிகள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட தரப்புகளின் ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் திறந்தமனதோடு பரிசீலிக்க தேர்தல் ஆணையம் தயார் என்று கூறினார். நெருக்கடிகளுக்கு அஞ்சி மின்னணு வாக்குப் பதிவு எந்திர முறையைக் கைவிடப்போவதில்லை. மேலும் வாக்குச் சீட்டு முறைக்கு திரும்பும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 24, 2019, 12:53 PM IST