Asianet News TamilAsianet News Tamil

50 வருடங்களாக ஒரு திருமணம் கூட நடக்காத கிராமம் பற்றி தெரியுமா..? நம்ம இந்தியால தான் இருக்கு..

இந்தியாவில் இருக்கும் ஒரு கிராமத்தில் உள்ள ஆண்கள் கடந்த 50 வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள் தெரியுமா..? அதற்கு ஒரு சிறப்பு காரணமும் உள்ளது. அது என்ன என்று தெரிஞ்சுக்கலாம் வாங்க.

not a single marriage for 50 years in barwan kalan village in bihar know why in tamil mks
Author
First Published Jun 27, 2024, 6:50 PM IST

உலகில் பல இடங்களில் விசித்திரமான சம்பவங்கள் நடப்பது மட்டுமின்றி, அது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமுமாகின்றது. இதுகுறித்து நாம் செய்திகளிலும் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் இந்தியாவில் ஒரு கிராமம் மிகவும் பிரபலமானது. அதன் பின்னணியில் உள்ள காரணம் மிகவும் சுவாரசியமானது. கண்டிப்பாக நீங்க அதை அறிந்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள். அது என்ன என்று அறிந்து கொள்ள இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்..

திருமணம் என்பது வாழ்க்கையில் நடக்கும் ஒரு அழகான தருணம். அதுவும் குறிப்பாக, இந்தியாவில் திருமணம் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. மேலும், ஒவ்வொருவரும் தனக்கென ஒரு துணை வேண்டும் என்றும், அவர்களுடன் சந்தோஷம் மற்றும் துக்கத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் விரும்புவது வழக்கம்.

ஆனால் இந்தியாவில் இருக்கும் ஒரு கிராமத்தில் உள்ள ஆண்கள் கடந்த 50 வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள் தெரியுமா..? அவர்கள் திருமணம் செய்து கொள்ளாததற்கு ஒரு சிறப்பு காரணமும் உள்ளது. அது என்ன என்று தெரிஞ்சுக்கலாம் வாங்க.

பர்வான் கலான் கிராமம்:
பீஹார் தலைநகர் பாட்னாவிலிருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பருவம் கலான் கிராமம். இந்த கிராமத்தில் இருக்கும் ஆண்கள் தான் கடந்த 50 வருடங்களாக திருமணமே செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். இங்கிருக்கும் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்றும், சபிக்கப்பட்ட இடம் என்றும் நீங்கள் நினைத்தால் அது தவறு.

அரசின் அலட்சியமே!
உண்மையில் இந்த கிராமத்தில் இருக்கும் ஆண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு அரசாங்கத்தின் அலட்சியமே காரணம் ஏனெனில் இந்த கிராமத்தில் இன்னும் அடிப்படை தேவைகளால் பூர்த்தி செய்யப்படவில்லை. உதாரணமாக, மின் வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இந்த கிராமத்தில் இல்லை. இதனால் தான் இதனால்தான் இந்த கிராமத்தில் இருக்கும் ஆண்களுக்கு தங்கள் மகளை திருமணம் செய்து கொடுக்க விரும்புவதில்லை. இது தவிர கிராமத்தில் பள்ளி மற்றும் கல்வி நிலையமும் சிறப்பாக இல்லை இது போன்ற சில காரணங்களால் இந்த கிராமத்து ஆண்கள் திருமணம் நடக்கவில்லை.

இங்கு உள்ள ஆண்கள் திருமணம் செய்யாமல் தனிமையில் இருப்பதற்கு இதுவே காரணம். அதுமட்டுமின்றி இந்த கிராம மக்கள் தங்களுக்கு சாலை அமைத்து தரும்படி, அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்களின் பிரச்சனைகளுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அரசு இருந்து விட்டது. இதனால் சில ஆண்டுகளுக்கு முன் கிராம மக்கள் தாங்களாகவே மலையை வெட்டி மண்சாலை அமைத்துள்ளனர். இதனால் தற்போது கிராமத்திற்கு வாகனங்கள் வரத் தொடங்கியுள்ளன.

மேலும், இங்குள்ள இளைஞர்கள் கிராமத்தில் வாழ விரும்பவில்லை. பலரோ தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக யாகம் கூட செய்தும் இருக்கிறார்கள். ஆனால் எல்லாமே தோல்வி அடைந்து விட்டது. ஆனால், பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு 2017 பர்வான் கலான் கிராமத்தில் முதல் திருமணம் பிப்ரவரி அன்று நடந்தது. அதற்குப் பிறகு இப்போது வரை எந்த திருமணமும் நடக்கவில்லை. எனவே, இந்த பர்வான் கலான் கிராமத்தில் இருக்கும் ஆண்கள் எவ்வளவு காலம் பிரம்மச்சாரியாக தங்களது வாழ்க்கையை கழிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios