nomination started for president election
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு இன்று முதல் தாக்கல் செய்யலாம் என தேர்தல் அதிகாரி, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்திய ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 17ம் தே நடைபெற உள்ளது. இதில் பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்களை களம் இறக்க தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பாஜக சார்பில் அமைச்சர் வெங்கய்யா நாயுடு, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது. அதேபோல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் அறிவிப்பதில் இழுப்பறியாக உள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிக்கையை, தேர்தல் அதிகாரி அனுப் மிஸ்ரா இன்று வெளியிட்டுள்ளார். அதில், ஜனாதிபதி வேட்பாளருக்கான மனுவை காலை 11 மணி முதல் 3 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் தாக்கல் செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுதவதற்கான வேட்பு மனு தாக்கல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதால், டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. காங்கிரஸ் சார்பில், ஓரிரு நாட்களில் வேட்பாளரை அறிவிப்பார்கள் என தெரிகிறது.
