Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்துக்கு தண்ணீர் விடக்கூடாது; வட்டாள் நாகராஜை குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்!

தமிழகத்துக்கு எந்த காரணத்தை கொண்டும் தண்ணீர் விடக்கூடாது என கன்னட சலவலி அமைப்பின் தலைவர் வட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்

No water should be released to Tamil Nadu for any reason says vatal nagaraj smp
Author
First Published Sep 26, 2023, 3:20 PM IST

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பந்த் நடைபெற்று வருகிறது. கர்நாடக நீர் பாதுகாப்பு குழு, சாந்தகுமார் குருபுரு தலைமையிலான இந்த பந்திற்கு 92 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, அம்மாநில போலீசார் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அதேபோல், வருகிற 29ஆம் தேதியன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு கன்னட சலவலி அமைப்பின் தலைவர் வட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்துள்ளார். ஒரே வாரத்தில் அடுத்தடுத்தடுத்து இரண்டு முழு அடைப்பு போரட்டம் நடைபெற்றால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால், இரு அமைப்பினரும் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அது தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, வருகிற 29ஆம் தேதி திட்டமிட்டபடி மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்த வட்டாள் நாகராஜ், இன்றைய பந்திற்கு ஆதரவு இல்லை என்றார். மேலும், பல்வேறு அமைப்பினரும் இன்றைய பந்திற்கான ஆதரவை திரும்பப்பெற்றனர். இந்த நிலையில், திடீர் ட்விஸ்டாக, வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது தலைமையிலான வெவ்வேறு கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் பெங்களூரில் இன்று போராட்டம் நடத்தினர். பெங்களூர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட அவர்கள் முயன்றனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். வட்டாள் நாகராஜை குண்டுகட்டாக தூக்கி போலீஸ் வாகனத்தில் போலீசார் ஏற்றினர்.

ரோஜ்கர் மேளாவில் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய பிரதமர் மோடி!

முன்னதாக, 29ஆம் தேதி நடக்கும் கர்நாடகா பந்த்துக்கு 2 ஆயிரம் கன்னட அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளதாக வட்டாள் நாகராஜ் தெரிவித்தார். பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து  முடங்கும் எனவும், விமான நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்,

பெங்களூர் பந்த்துக்கு 144 தடை விதித்து இருப்பதை கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்த அவர், 29ஆம் தேதி நடக்கும் பந்த்துக்கு போலீசார் கண்டிஷன்களை போட்டால் கடும்  விளைவுகளை சந்திக்க நேரிடம் எனவும், அன்றைய தினம் நடைபெறும் கர்நாடகா பந்த்தில் 1 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர் எனவும் தெரிவுத்தார். தமிழகத்துக்கு எந்த காரணத்தை கொண்டும் தண்ணீர் விடக்கூடாது எனவும் அப்போது வட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios