அண்மையில் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதியில் நீத்து ஷட்டர்ன் வாலா  என்பவர் சுயேட்சையாப போட்டியிட்டார்.

நேற்று மும்தினம் நடைபெற்ற வக்கு எண்ணிக்கையின் போது நீத்து ஷட்டர்ன் வாலாவுக்கு வெறும் 5 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது.  தனக்கு 5 ஓட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளது என்பதை தெரிந்து கொண்ட நீத்து ஷட்டர்ன் வாலா கதறி அழுதார்.

இதைப் பார்த்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்த அதிகாரிகள் அவருக்கு ஆறுதல் கூறி, எதற்காக அழுகிறார் என காரணம் கேட்டனர். அப்போது, ''என் வீட்டில் மொத்தம் ஒன்பது உறுப்பினர்கள் உள்ளனர்; அனைவருமே எனக்கு ஓட்டளித்ததாக கூறினர்.

ஆனால், எனக்கு ஐந்து ஓட்டுகள் மட்டுமே கிடைத்து உள்ளன; என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே, எனக்கு துரோகம் செய்து விட்டனர். நான் கட்டிய என் மனைவி கூட எனக்கு வாக்களிக்கவில்லை என கூறி  மீண்டும்  அழுதார்.

மேலும் இனி, தேர்தலில் போட்டியிட மாட்டேன், என கூறிய அவரை அதிகாரிகள் ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர்.