Asianet News TamilAsianet News Tamil

எல்லை மீறி உள்ளே வந்தால் ஒருத்தனும் உயிரோட போகமுடியாது... இந்திய ராணுவ தளபதி அதிரடி..!

இந்தியாவுக்குள் ஊடுருவ நினைக்கும் பயங்கரவாதிகள், மீண்டும் உயிருடன் திரும்ப முடியாது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்

No one can go alive if they cross the border ... Indian Army Commander Action
Author
India, First Published Nov 20, 2020, 8:15 AM IST

இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக்கும் பயங்கரவாதிகள் உயிருடன் திரும்ப முடியாது என இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு- காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, நக்ரோட்டா என்ற இடத்தில் உள்ள சுங்கச்சாவடியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆப்பிள் ஏற்றிச் சென்ற லாரியை சோதனையிட முயன்றபோது, பதுங்கியிருந்த நான்கு பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.No one can go alive if they cross the border ... Indian Army Commander Action

லாரி ஓட்டுநர் கீழே இறங்கி தப்பியோடி நிலையில், வெடிகுண்டுகளை வீசி பயங்கரவாதிகள் லாரியை வெடிக்க வைத்தனர். சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்ததில், நான்கு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்தியாவுக்குள் ஊடுருவிய அந்த நான்கு பயங்கரவாதிகளும், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.No one can go alive if they cross the border ... Indian Army Commander Action

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராணுவ தளபதி நரவானே, ’’பாதுகாப்புப் படையினர் திறம்பட பயங்கரவாதிகளை அழித்துள்ளனர். வீரர்களின் துணிச்சலுக்கும், வீரத்துக்கும் இந்தச் சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியாவுக்குள் ஊடுருவ நினைக்கும் பயங்கரவாதிகள், மீண்டும் உயிருடன் திரும்ப முடியாது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்’’என அவர் தெரிவித்தார். 


 

Follow Us:
Download App:
  • android
  • ios