No non veg food for economy class passengers on Air India domestic flights

இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிறுவனமாக உள்ள ஏர் இந்தியா, பெருத்த கடன் சுமையில் சிக்கியுள்ளது. கடனிலிருந்து மீளப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், முதல் கட்டமாக செலவைக் குறைக்க அந்நிறுவனம் எடுத்துள்ள முடிவால் சர்ச்சையில் சிக்கியுள்ளது .

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதாவது குறைந்த தூரம் பயணம் மேற்கொள்ளும் விமானச் சேவைகளுக்கு அசைவ உணவை கடந்த வாரம் இந்நிறுவனம் ரத்து செய்தது. இதை அசைவ உணவு ரத்தால் செலவு குறையும் என தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து இந்த நிறுவனம் கூறியுள்ளதாவது: "ஏர் இந்தியா நிறுவனம் அதிக கடனில் சிக்கியுள்ளது. ரூ.550 பில்லியன் அளவுக்குக் கடன் 
தற்போது உள்ளது. 2015ஆம் ஆண்டு எடுத்த முடிவில் உள்நாட்டில் 90 நிமிடங்களுக்கும் குறைவான பயண சேவைகளுக்கு அசைவ உணவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் குறிப்பிட்ட அளவு செலவைக் கட்டுப்படுத்த முடியும்"என்று தெரிவித்துள்ளது.

சேம்பிள் ரெஜிஸ்டிரேசன் சிஸ்டம் என்ற ஆய்வு நிறுவனம் 2014ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின் படி "5 வயதுக்கு அதிகமான 71 சதவிகித பேர் அசைவ உணவு சாப்பிடுபவர்கள்" என்று கூறுகிறது.