குரங்கு அம்மை நோய் தொற்று குறைவாக உள்ளதாகவும் உயிரிழப்புகளும் அரிதாக இருப்பதால் யாரும் பீதி அடையத் தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

குரங்கு அம்மை நோய் தொற்று குறைவாக உள்ளதாகவும் உயிரிழப்புகளும் அரிதாக இருப்பதால் யாரும் பீதி அடையத் தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தற்போது 50க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். எனவே உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்தது. மேலும் இந்தியா, சர்வதேச நாடுகளிலிருந்து வருபவர்களை விமான நிலையம், துரைமுகம் நாட்டில் எல்லைகளில் தடுத்து நிறுத்தி பரிசோதித்து வருகிறது.

இதையும் படிங்க: முதல்முறையாக டெல்லியில் ஒருவருக்கு குரங்கம்மை.. வெளிநாடு எதுவும் செல்லாத நிலையில் பாதிப்பு..

இந்த நிலையில் குரங்கு அம்மை நோய் இந்தியா உட்பட 75 நாடுகளில் பரவி விட்டது. 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதித்துள்ளனர். 5 பேர் பலியாகி உள்ளனர். இது மேலும் பல நாடுகளுக்கு பரவும் அபாயம் ஏற்பட்டு இருப்பதால், இந்த நோயை உலக சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. இந்த நோயை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும், குறிப்பாக, ஓரினச்சேர்க்கையாளர்களை கண்காணிக்கும்படியும் இந்த அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரஸ் அதனோம் ஜெப்ரியாசிஸ் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியா-வில் 834 பேருக்கு ஒரு மருத்துவர்: WHO கணக்கைவிட சிறப்பு: மத்திய அரசு பெருமிதம்

இதை அடுத்து கொரோனா தொற்று நோயிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில், இந்தியாவில் குரங்கு நோய் பாதிப்புகளைக் கண்டறிந்து கண்காணிப்பதற்கான கண்காணிப்பு அமைப்பை இந்தியா அமைத்துள்ளது. இந்தியாவில் இதுவரை நான்கு பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் மூன்று மற்றும் டெல்லியில் ஒருவர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே குரங்கு அம்மை நோய் தொற்று குறைவாக உள்ளதாகவும் உயிரிழப்புகளும் அரிதாக இருப்பதால் யாரும் பீதி அடையத் தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.