No need to original adaar in train journy

ரயில் பயணங்களில் ஒரிஜினல் ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமத்தை டி.டி.ஆரிடம் காட்ட வேண்டிய அவசியமில்லை என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் டிஜி லாக்கர் ஆப்பைப் பதிவிறக்கம் செய்து அதில் ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த டிஜிட்டல் ஆவணங்களை டிக்கெட் பரிசோதகரிடம் காட்டினாலே போதுமானது, ஒரிஜினல் ஆதார் அட்டை அல்லது மற்ற அடையாள அட்டை எதுவும் தேவையில்லை என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறை அனைத்து ரயில்வே மண்டல மேலாளர்களுக்கும், முதன்மை வர்த்தக மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ‘’ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர் ரயில் பயணத்தின்போது, டிக்கெட் பரிசோதகரிடம் மத்திய அரசின் டிஜி லாக்கரில் இருக்கும் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றைக் காண்பித்தால் அவை அங்கீகாரமான அடையாள அட்டையாக ஏற்றுக்கொள்ளப்படும்.

இது தொடர்பாக அனைத்து மேலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், ஓட்டுநர் உரிமம் அல்லது ஆதார் அட்டையை ஒரு பயணி தானாகவே பதிவேற்றம் செய்து அதை அடையாள அட்டையாகக் காண்பித்தால் அது அங்கீகாரமற்ற அடையாள அட்டையாகக் கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

டிஜிலாக்கரில் இருந்து மட்டுமே அடையாள அட்டைகள் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.டிஜி லாக்கர் ஆப் மூலம், ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு, பல்வேறு வகையான ஆவணங்கள், சான்றிதழ்கள் போன்றவற்றைப் பதிவிறக்கமும் பதிவேற்றமும் செய்துகொள்ளலாம்