இனி ஆதார் எண்ணை எங்கெல்லாம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை பார்க்கலாம்.

எதற்கெடுத்தாலும் ஆதார், வங்கி கணக்கு முதல் காஸ் சிலிண்டர் வாங்குவது முதற்கொண்டு சிம் கார்டு வரை ஆதார் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

நாடு முழுவதும் இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இது குறித்த வழக்கு  உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வங்கி கணக்கு, சிம் கார்டு வாங்க, மொபைல் சேவையில் இணைக்க இது போன்ற விஷயங்களும் ஆதார் கட்டாயமா ? என வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில் இன்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏஎம் கான்வில்கர், ஏ.கே சிக்ரி, டி.ஒய் சந்திரசூட், அசோக் பூஷன் ஆகிய ஐந்து நீதிபதிகளின் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அதன்படி, 

அரசு பணிகளுக்கு, அரசு சார்ந்த திட்டங்கள், பான் கார்ட் பெற ஆதார் கட்டாயம், ரேஷன் கடை சமையல் காஸ் மானியம் பெற, வருமான வரி தாக்கல் செய்ய... இவை அனைத்திற்கும் ஆதார் அவசியம்.

ஆதார் தேவை இல்லாத இடங்கள்

வங்கிக் கணக்குடன் இணைக்க, செல்போன் வாங்க, சிம் கார்ட் வாங்க, கார், பைக் வாங்க ஆதார் தேவை  இல்லை. தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் தங்கள் நிறுவனத்தில் ஆதார் தர தேவை இல்லை.

பள்ளி, கல்லூரியில் சேர்வதற்கும், மருத்துவ சேவைகளுக்கும் ஆதார் தேவை இல்லை 

நீட், சிபிஎஸ்சி, யூஜிசி போன்ற தேர்வுகளுக்கும் ஆதார் தேவை இல்லை...

தனியார் நிறுவன எந்த சேவைக்கும் ஆதார் தேவை இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

இதற்கு முன்னதாக ஆதார் எங்கெல்லாம் பயன்படுத்த வேண்டும் ? எங்கு தேவை இல்லை என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நீடித்து வந்த நிலையில் தற்போது இதற்கான முடிவு கிடைத்து உள்ளது. அதே சமயத்தில் ஏற்கனவே மொபைல் சேவையில் ஆதார் எண்ணை இணைத்து விட்டவர்கள் பற்றிய விவரம் வெளிவர வில்லை.