Asianet News TamilAsianet News Tamil

ஜுலை 1 ஆம் தேதி முதல் ஆதார் அட்டை அவசியமில்லை…என்ன சொல்கிறது மத்திய அரசு?..

No must adar card for senior citizens
no must-of-adar-card
Author
First Published May 13, 2017, 6:27 AM IST


ஜுலை 1 ஆம் தேதி முதல் ஆதார் அட்டை அவசியமில்லை…என்ன சொல்கிறது மத்திய அரசு?..

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இனி ஆதார் அட்டை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆதார் அட்டை என்பது தற்போது மிகுந்த அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. மத்திய அரசின் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஆதார் அட்டை அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி நடவடிக்கைள், வருமான வரி செலுத்துதல், குடுமப அட்டை, நலத்திட்ட உதவிகள் பெறுதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகிறது.

இந்நிலையில் ஒரு சிலருக்கு ஆதார் அட்டை அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,நாடு முழுவதும் ஆதார் அட்டை கட்டாயம் என்ற உத்தரவு எல்லைப்புற மாநிலங்களான ஜம்மு-காஷ்மீர், மேகாலயா மற்றும் அசாம் மக்களுக்கு முழுமையாக பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதே போன்று  நாட்டின் பிற பகுதிகளில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அட்டை அவசியமில்லை என்றும். மத்திய அரசின் இந்த புதிய உத்தரவு வரும்  ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய குடியுரிமை இல்லாதவருக்கு ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
.

Follow Us:
Download App:
  • android
  • ios