No more Present sir MP school students to roll call with Jai Hind
பள்ளிகளில் வருகை பதிவேட்டின் போது ‘யெஸ்சார், யெஸ்ேமடம்’, உள்ளேன் ஐயா என்று கூறுவதற்கு பதிலாக மாணவர்கள் ‘ஜெய்ஹிந்த்’ என கூறவேண்டும் என்று மத்தியப் பிரதேச அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
அக்டோபர் முதல்தேதியில் இருந்து சாட்னா நகரில் உள்ள பள்ளிகளில் இந்த மாணவர்கள்ஜெய்ஹிந்த் கூறும் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
மத்திய பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் அமைச்சராகசிவராஜ்சிங் சவுகான் உள்ளார். இவரது அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக விஜய் ஷா என்பவர் உள்ளார்.
கல்வி அமைச்சர் விஜய் ஷா சமீபத்தில் சாட்னா மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறார். அதன்படி “ மாணவர்கள் வருகை பதிவேடு பதிவு செய்யும் போது,யெஸ் சார்/யெஸ் மேடம், உள்ளேன் ஐயா என்பதற்கு பதிலாக ‘ஜெய்ஹிந்த்’ என்று கூற வேண்டும் என்பதுதான்.
இது குறித்து கல்வி அமைச்சர் விஜய் ஷா கூறியதாவது-
சாட்னாவில் உள்ள தனியார் பள்ளிகளில் முதலில் சோதனை அடிப்படையில் வருகை பதிவேட்டின் போது மாணவர்கள் ஜெய்ஹிந்த் கூற உத்தரவிட்டுள்ளோம். இது வெற்றி பெற்றால் முதல்வரிடம் அனுமதி பெற்று ஒட்டுமொத்த மாநிலம் முழுவதும் இந்த முறை அமல்படுத்தப்படும் , தேசபக்தி தொடர்பான ஒன்று என்பதால் இதை அனைத்து பள்ளிகளும் மனப்பூர்வமாக பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இதேபோன்ற உத்தரவை கல்வி அமைச்சர் விஜய் ஷா பிறப்பித்து இருந்தார். அனைத்து பள்ளிகளும் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, ேதசிய கீதம் கண்டிப்பாக பாட வேண்டும். இதை செய்யாத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
