வங்கி மோசடிகளை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.  

சில ஆண்டுகளுக்கு முன்பு வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி சென்றார் விஜய் மல்லையா.

இதே போல் சில நாட்களுக்கு முன்பு வங்கியில் பணத்தை வாங்கி ஏமாற்றிவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி சென்றார் நீரவ் மோடி. 

இதனால் இந்தியாவிற்கு பல கோடி கணக்கில் இழப்பு ஏற்பட்டு வருகின்றது. இது போன்ற நிலை மீண்டும் இந்தியாவிற்கு வரக்கூடாது என்பதற்காக மத்திய அரசு புது சட்டம் ஒன்றை இயற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது 

அதாவது, வங்கி மோசடி குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் வகையில் மசோதா ஒன்றைக் கொண்டுவர முடிவு செய்த மத்திய அரசு இது குறித்து கடந்த 3 நாட்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. 

இந்த மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் பறிமுதல் செய்யவும், மேலும் மோசடி செய்தவர்கள் எந்த நாட்டில் பதுங்கி இருந்தாலும் அவர்களை கைது செய்யவும், மேலும் வங்கிகளில் 100 கோடிக்கு மேல் கடன் வாங்குபவர்கள் மற்ற நாடுகளில் குடியுரிமை இருக்கக்கூடாது என பல்வேறு விதிகளுடன் கூடிய புதிய மசோதாவை விரைவில் கொண்டு வர மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.