no leave for bank staffs till april 1

ஏப்ரல் 1-ந்தேதி வரை அனைத்து வங்கிகளும் பணியாற்ற வேண்டும், அரசு விடுமுறை நாட்கள் எடுக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் 29-ந்தேதி யுகாதி வருடப்பிறப்பு என அரசு விடுமுறை நாட்களாக இருந்தாலும் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது எனவும்ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

2016-17ம் நிதியாண்டு முடிய இன்னும் 6 நாட்கள் மட்டுமே இருக்கிறது. அரசு தரப்பிலும், நிறுவனங்கள் தரப்பிலும் பல்வேறு வரி நிலுவைகள் செலுத்த வேண்டியது இருக்கும். அதற்காக வங்கிகள் செயல்படுவது முக்கியம். ஆதலால், மார்ச் 25-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 1-ந்தேதிவரை அனைத்து வங்கிகளும்விடுமுறை இன்றி பணியாற்ற வேண்டும்.

இந்த இடைப்பட்ட காலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை நாட்களில் கூட வங்கிகள் விடுமுறை விடப்படாமல், வங்கிகள் தங்கள் கிளைகளை திறந்து வைத்து செயல்பட வைக்க வேண்டும். சில குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி கிளைகளும் தொடர்ந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.