No germen and french language

மும்மொழி கொள்கையைில் ஜெர்மன்,பிரெஞ்சு உள்ளிட்ட அயல்நாட்டு மொழிகளை சேர்க்கக்கூடாது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.

இந்த நடைமுறை அடுத்த கல்விஆண்டு முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள அறிவுறுத்தல் பற்றிய விபரம் வருமாறு-

பள்ளிகளில் மும்மொழிக்கொள்கையில் தாய்மொழி, இந்தி, மற்றும் ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளே இடம்பெறும். ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட அன்னிய மொழிகள் அரசின் மும்மொழிக்கொள்கையில் இடம்பெறாது.

மாணவர்கள் விருப்பப்பட்டால் பள்ளிகளில் ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட அன்னிய மொழிகளை 4-வது மொழியாக மற்றும் 5-வது மொழியாக பயிலலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 8-ம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட்ட மும்மொழிக்கொள்கை இனி 10-ம் வகுப்புவரை நீடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் சாசனத்தி்ல் இடம்பெற்றுள்ள மொழிகள் மட்டுமே மும்மொழிக்கொள்கையில் இடம்பெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள 18,000 கல்வி நிறுவனங்களில் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் 8-ம் வகுப்பு வரை 3-வது மொழியாக அயல்நாட்டு மொழிகள் கற்பிக்கப்பட்டுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.