பசி என்று சொல்லும் போது கூட புன்னகைக்குமா இதழ்கள்? வெள்ளத்தின் நடுவில் மீட்பு குழுவையே கண்கலங்க வைத்த சிறுமிகள்

கடந்த 50 வருடங்களாக வரலாறு காணாத அளவு பெய்துவரும் கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது கேரளம். கனமழையால் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தாலும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவினாலும் 73 பேர் பலியாகி இருக்கின்றனர். 300க்கும் அதிகமானோர் இந்த வெள்ளத்தினிடையே காணாமல் போயிருக்கின்றனர். 

ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி ஒருபக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

தொடர் மழையால் அத்தியாவசிய பொருள்களை கூட பெற முடியாமல் தவித்து வருகின்றனர் பலர். அவர்களுக்கு மீட்பு குழு தங்கள் முழு முயற்சியுடன் உதவிட முயன்று வருகின்றனர். அப்படி உதவிட மீட்பு குழுவை சேர்ந்த ஒரு நபர் கேரளாவில் இருந்த ஒரு விட்டினுள் சென்று அங்கு இருக்கும் சிறுமியிடம் வீட்டில் உணவு இருக்கிறதா? என கேட்கிறார்.
அந்த சிறுமி இல்லை என பதிலளித்திருக்கிறார்.

Scroll to load tweet…

அந்த வீட்டில் அந்த சிறுமியுடன் மேலும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். கேரளாவில் உள்ள இடுக்கி பகுதியை சேர்ந்த அந்த சிறுமியிடம் வீட்டில் அரிசி இருக்கிறதா என்று மீட்பு குழுவினர் கேட்கும் போது அவர் இல்லை என்றே சொல்கிறார். காலையில் சாப்பிட்டீர்களா? என்ற கேள்விக்கும் இல்லை என்றே பதிலுரைக்கிறார். இல்லை என்று சொல்லும் போது அவரது முகத்தில் இருக்கும் புன்னகை அங்கு வந்த மீட்பு குழுவையே வியக்க வைத்திருக்கிறது.

தொடர்ந்து அங்கிருக்கும் பிறரிடமும் உணவிருக்கிறதா? என கேட்டுவிட்டு, தான் உணவினை கொண்டுவருவதாக கூறி செல்கிறார் அந்த நபர். சொன்னது போலவே மீட்பு குழுவினை சேர்ந்த அந்த நபர் உணவினை தந்துவிட்டு தான் சென்றிருக்கிறார். இல்லை என கூறும் போது “பசி எனக்கு பழகிப்போனது தான் என்பது போல அந்த சிறுமி நடந்து கொண்டவிதம்” வெள்ளத்தை விட கொடுமை வறுமை என்று நம்மை எண்ணம் கொள்ள செய்கிறது. கேரள சிறுமியின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.