வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு குடிநீர் விநியோகம் ரத்து !!
பெங்களூரின் பல்வேறு பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என்று பெங்களூரு குடிநீர் வடிவால் வாரியம் தெரிவித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இன்று திங்கள் கிழமை காலை அலுவலகங்களுக்கு செல்பவர்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர். எங்கு பார்த்தாலும் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. மரத்தாஹள்ளி - சில்க் ரோட்டில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டியை இணைக்கும் சாலைகளில் மணிக்கணக்கில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளுக்கு..“பிரதமர் பதவி டார்கெட்.! பாஜகவுக்கு எதிராக களமிறங்கிய ஸ்டாலின் - ராகுல் காந்தி” மாஸ்டர் பிளான் எடுபடுமா ?
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ரிச்மாண்ட் பகுதியில் பெரிய அளவில் வெள்ள பாதிப்பு இருந்ததால், பொது மக்கள் அதிகாரிகளை திட்டி தீர்த்தனர். முக்கிய வேலை இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வருமாறு போலீசாரும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நகருக்கு காவிரி ஆற்றில் குடிநீர் பம்ப் செய்து கொண்டு வரப்படுகிறது. மாண்டியா பகுதியில் குடிநீர் ஏற்றம் செய்யப்படும், பம்ப்பிங் நிலையம் ஆற்று நீரில் மூழ்கியிருக்கிறது.
இதனால் நகரின் 50க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இரண்டு நாட்களுக்கு குடிநீர் சப்ளை இருக்காது என்று பெங்களூரு குடிநீர் வடிவால் வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து மாண்டியா பகுதியில் இருக்கும் டிகே ஹள்ளி நீரேற்ற நிலையத்திற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை செல்லுவார் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது நீரேற்ற பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க சோதனையிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு..Cyrus Mistry : டாடாவின் வாரிசு முதல் டாடா சன்ஸை நீதிமன்றத்துக்கு இழுத்தவர் வரை.! யார் இந்த சைரஸ் மிஸ்திரி ?
என்ஜினில் ஏற்பட்டு இருக்கும் கோளாறுகளை சரி செய்து விரைவில் இயக்க வைப்பதற்கான பணிகளில் தொழில்நுட்ப வல்லுனர்களும் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருக்கு காவிரி ஆறுதான் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. நகரின் பெரும்பாலான ஏரிகள் நிறைந்து வழிகின்றன. கழிவுநீர் கால்வாய்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !