கர்நாடகா மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் பாகத் பியு என்ற தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் இடைநிலை தேர்வு நடைபெற்று வருகிறது. 
கடந்த புதன்கிழமை அன்று வேதியியல் தேர்வு நடைபெற்றுள்ளது. அந்த தேர்வின் போது மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து எழுதுவதைத் தடுப்பதற்காக ஒரு கேவலமான  நடவடிக்கையை எடுத்துள்ளது கல்லூரி நிர்வாகம். 

தேர்வு எழுதும் மாணவர்களின் தலையில் அட்டை பெட்டியைக் கவிழ்த்து வைக்க சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர் ஒருவர் இதனைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இது வேடிக்கையான செயல் என்று சிலர் கருத்து தெரிவித்திருந்தாலும், இவ்விவகாரம் கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காப்பி அடிப்பதை தடுக்க இப்படி ஒரு முறையா, இப்படிச் செய்தால் மாணவர்களால் எப்படித் தேர்வு எழுத முடியும் எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாகக் விசாரணை நடத்த முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.