Asianet News TamilAsianet News Tamil

"செல்லாத 500,1000 ரூபாய் நோட்டுகளை இனி மாற்ற முடியாது" - NEWSFAST EXCLUSIVE

no chance to change old currencies
no chance to change old currencies
Author
First Published Jul 6, 2017, 10:00 AM IST


செல்லாத ரூபாய் 500, 1,000 நோட்டுகளை மாற்ற 2-வது வாய்ப்பு வழங்கப்பட்டால், ரூபாய் நோட்டு தடை எதர்காக கொண்டு வரப்பட்டதோ அதற்கான முழுமையான அர்த்தத்தை இழந்துவிடும், ஆதலால் ரூபாய் நோட்டுகளை மாற்ற 2-வது வாய்ப்பு வழங்கப்படாது என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கருப்புபணம், ஊழல்,கள்ளநோட்டுகளை ஒழிக்க கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.அதைத் தொடர்ந்து மக்கள் டிசம்பர் 30-ந்தேதி வரை தபால் நிலையங்கள், வங்கிகளில் செல்லாத நோட்டுகளை கொடுத்து, புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகளை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

 மேலும், ரூபாய் நோட்டு தடை காலத்தில் வெளிநாட்டில் தங்கி இருந்தோர், என்.ஆர்.ஐ. ஆகியோர் மார்ச் 31-ந்தேதி வரை ரிசர்வ் வங்கி கிளைகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம், மற்றவர்கள் ரிசர்வ் வங்கியில் உரிய காரணங்களைக் கூறி மாற்றலாம் என அறிவித்தது. ஆனால், இந்த உத்தரவை திடீரென திருமப் பெற்று மக்களை டெபாசிட்செய்ய அனுமதிக்கவி்ல்லை.

no chance to change old currencies

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுக்களை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், கடந்த 3 நாட்களுக்கு முன் பிற்பித்த உத்தரவில், “ நியாயமான காரணங்களால், பணத்தை டெபாசிட்செய்ய முடியாதவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்க வேண்டும். அது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பது அவசியம்.இது குறித்து 2 வார காலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தெரிவித்தது.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கனிவுடன் அரசு அலோசிக்கும் என்ற போதிலும், செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற வழங்கப்படும் 2-வது வாய்ப்பு நிச்சயம் பல்வேறு விதமான தவறுகள் நடக்க வழியை ஏற்படுத்திவிடும்.

இதை அனுமதித்தால், இப்போது நாட்டுக்கு வெளியே இருக்கும், அதாவது, நேபாளம், வங்காளதேசம், பூடான் ஆகிய நாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டு இருக்கும் நோட்டுகள் மீண்டும் உள்ளே வரக்கூடும், இதனால், மேலும் சட்டவிரோதமாக பணம் புழங்க வாய்ப்பு உருவாகிவிடும். இது ரூபாய் நோட்டு தடை எதற்காக கொண்டுவரப்பட்டதோ அதற்கான ஒட்டுமொத்த அர்த்தத்தையும் இது வீணடித்துவிடும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க இருக்கிறோம்.

no chance to change old currencies

நக்சலைட்டுகளை ஒடுக்கியதிலும், தீவிரவாதிகளின் செயல்களை கட்டுப்படுத்தியதிலும், ரூபாய் நோட்டு தடை முடிவு மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அவர்களுக்கு நிதி செல்வது முற்றிலும் தடுக்கப்பட்டது.

அதலால், உச்சநீதிமன்றத்தில், தெரிவிப்பது என்னவாக இருக்கும் என்றால், ரூபாய் நோட்டு தடை காலத்தில் செல்லாத நோட்டுகளை மாற்ற அரசு முடிந்த அளவு வசதிகளை மக்களுக்கு செய்துவி்ட்டது, மற்றொருவாய்ப்பு கொடுத்தால், அது இந்த திட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டதோ அதை நீர்த்துப்போகச் செய்துவிடும் எனத் தெரிவிப்போம்” எனத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios