No can not be exchanged for cash up to Rs 2 lakh - Coming soon new amendment

ரூ. 3லட்சத்துக்கு மேல் ரொக்கப்பரிமாற்றம் செய்ய ஏப்ரல் 1-ந்தேதி முதல் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதைத் திருத்தி, ரூ.2 லட்சத்துக்கு மேல் பரிமாற்றவும் தடை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், நிதி மசோதா என்ற பெயரில் இது போல் 40 சட்டத்திருத்தங்களை நிதி அமைச்சகம் கொண்டு வந்துள்ளது.

மக்களவையில் நேற்று நிதிமசோதா ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, 40 திருத்தங்கள் செய்யப்படுவதற்கு எதிர்க்கட்சிகளான திரிணாமுல்காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் எம்.பி.கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசு புற வாசல் வழியாக வர முயல்கிறது என்று குற்றம் சாட்டினர்.

கம்பெனிச் சட்டம், இ.பி.எப்., கடத்தல் மற்றும் வெளிநாடு பரிமாற்றம் சட்டம்,டிராய் சட்டம்,தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்டவற்றில் திருத்தம் கொண்டு வர முன்வைக்கப்பட்டது. 

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே பேசிய அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன், நிதி அமைச்சகம் கொண்டுவருவது பண மசோதா அல்ல, இது நிதி மசோதாவாக கருத வேண்டும் என்றார்.

இந்த நிதி மசோதாவில் கொண்டு வரப்படும் திருத்தத்தில், முக்கியமாக ரூ. 2 லட்சத்துக்கு மேல் ரொக்கமா பரிமாற்றம் செய்ய தடை செய்து திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. ஏப்ரல் 1-ந்தேதி முதல், ரூ. 3 லட்சத்துக்கு அதிகமாக ரொக்கமாகப் பரிமாற்றம் செய்யத் தடை விதித்து பட்ஜெட்டில் ஜெட்லி அறிவித்தார். இதை மாற்றி ரூ. 2லட்சமாக குறைக்கப்பட உள்ளது.

அவ்வாறு ரூ. 2லட்சத்துக்கு அதிகமாக ரொக்கப்பரிமாற்றம் நடக்கும் போது, பரிமாற்றம் செய்யப்படும் அதேத் தொகை அபராதமாக விதிக்கப்படும்.