Asianet News TamilAsianet News Tamil

செத்தவரை தூக்கிட்டு போக ஆம்புலன்ஸ் இல்ல.. புதிய இந்தியா எப்படி பிறக்கும்..?

no ambulance in GH and therefore youth carry relative dead body in shoulder
no ambulance in GH and therefore youth carry relative dead body in shoulder
Author
First Published Mar 2, 2018, 1:20 PM IST


நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு அவலங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. புதிய இந்தியா என்று மத்திய பாஜக அரசு முழங்குகிறது.

ஆனால், நாடு முழுவதும் ஆம்புலன்ஸ் இல்லாதது, மருத்துவமனைகளின் அலட்சியம் என ஏகப்பட்ட அவலங்கள் உள்ளன. அப்படியான ஒரு சம்பவம் தான் பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் மீண்டும் நடந்துள்ளது.

பணியின்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த சுரஜ்பால் என்பவர் பெஹ்ஜோய் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சுரஜ்பால் உயிரிழந்தார். அவரது உடலை எடுத்து செல்ல உறவினர்கள் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டது. ஊழியர்களும் கைவிரித்துவிட்டனர்.

ஆம்புலன்ஸ் கிடைக்காததால், மருத்துவமனையிலிருந்து 5 கி.மீ தூரத்திற்கு, சுரஜ்பாலின் உடலை உறவினரான கோபிசந்த், தனது தோளில் சுமந்து சென்றுள்ளார். ஆம்புலன்ஸ் இல்லாததால், 5 கிமீ தூரம் உடலை தூக்கி சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது. அதுவும், புதிய இந்தியா என்ற முழங்கும் பாஜக ஆளும் மாநிலத்தில்..

பெஹ்ஜோய் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் இல்லையென்றாலும் சம்பல் அரசு மருத்துவமனையில் அப்போது ஆம்புலன்ஸ் இருந்துள்ளது. அதனை வரழைத்து கோபிசந்துக்கு மருத்துவர்கள் உதவவில்லை. எனவே சம்மந்தப்பட்ட அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட மருத்துவ அதிகாரிக்கு ஆட்சியர் பரிந்துரைத்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios