பாஜகவில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக மீண்டும் இரு துருவங்கள் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. பீகாரில் முதல்வரும், ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் தொடக்கத்தில் பாஜக கூட்டணி அங்கும் வகித்து வந்தனர். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அக்கூட்டணியில் இருந்து வெளியேறினார். 

பிறகு கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெற்றனர். பிறகு மீண்டும் முதல்வராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். 

இதனிடையே லாலுவுக்கும் - நிதிஷ்குமாருக்கு  மோதல் போக்கு ஏற்பட்டது. திடீரென கூட்டணியில் இருந்து விலகுவதாக நிதிஷ்குமார் அறிவித்தார். இதனால் மீண்டும் பா.ஜ.க.வுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தார்.

இந்தநிலையில் பா.ஜ.க.வுக்கும் ஐக்கிய ஜனதா தளம் இடையே  நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக  கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் மீண்டும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் அடங்கிய மதசார்பற்ற கட்சிகளின் கூட்டணியில் மீண்டும் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் பா.ஜனதா நடத்திய சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தார். இதனால் இரு கட்சிகளுக்கு இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. திடீரென மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லாலு பிரசாத் யாதவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார். இதுவே கூட்டணிக்கு ஆச்சாரமாக அமைந்துள்ளது என  அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.