இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமிருந்து ஆர்டர் வந்துவிடது, நித்யானந்தாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிட தயாராகிவிட்டது காவல்துறை, இண்டர்போல் போலீஸின் உதவியுடன் நித்தியானந்தாவை மடக்கிட, கையை மடக்க துவங்கியிருக்கிறது இந்திய காவல்துறை! என்று சமீபத்தில்  செய்திகள் வெளிவந்தன. இதனால் நித்தி கைது எப்போது? என்று பெரும் ஆர்வமுடன் ஒரு கூட்டமே காத்திருக்க துவங்கியது.
ஆனால் அப்படி எதுவும் இந்த நொடி வரையில் நிகழவில்லை. இந்த நிலையில், நித்யானந்தா மீது மேலும் புதிய புகார்கள் வெடிக்கத் துவங்கியுள்ளன. அத்தனையும் ஆர்.டி.எக்ஸ்! ரேஞ்சுக்கு ஏக பயங்கரமானவை என்பதுதான் மேட்டரே. 

நித்தி மீது வெடித்துள்ள புதிய சர்ச்சைகள்....
தனது இரண்டு மகள்களையும் நித்யானந்தா கடத்திவிட்டார்! என்று புகார் ஃபைல் பண்ணினார், நித்தியின் பழைய மேலாளர் ஜனார்த்தன சர்மா. இந்த வழக்கு கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜனார்த்தன சர்மாவின் மகள்களை வெளிநாட்டுக்கு கடத்தி சென்றதாக கூறப்படும் சதீஷ் செல்வக்குமார்! எனும் நபர் இறந்துவிட்டதாக நீதிமன்றத்தில் நித்தி தரப்பினரால் சொல்லப்பட்டது. இது ஒரு பிரளயத்தை  உருவாக்கியுள்ளது. அகமதாபாத் ஆசிரமத்தில் இருந்த சதீஷ்  கடந்த மாதம்தான் பெங்களூருவிலிருக்கும் பிடதி ஆசிரமத்துக்கு சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த இரண்டு பெண்களை நேபாளத்துக்கு காரில் அழைத்து வர உத்தரவிட்டாராம் நித்தி. குருவின் உத்தரவுப்படி அப்பெண்களை காரில்  ஏற்றிச் சென்று, எஸ்கேப் செய்தது இந்த சதீஷ்தானாம். இந்த நிலையில்தான் ஜனவரி 6-ம் தேதியன்று சதீஷ் ஒரு விபத்தில் இறந்துவிட்டார்! என்று தகவலை தந்திருக்கிறது நித்தி தரப்பு. 

நித்யானந்தாவின் எல்லைக்குள் நடக்கும் பல் மர்ம மரணங்களில் ஒன்றாக சதீஷின்  சாவும் சேர்ந்திருக்கிறது. விபத்து நடந்து, அந்த நபர் இறந்திருக்கிறார், ஆனால் அந்த ஸ்பாட்டுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை? என்பதே பலரது கேள்வியும். இந்த விவகாரத்தில் நித்தி மீதான பிடி இறுகிக் கொண்டிருக்க, அவருக்கு எதிராக சில ‘அய்யய்யே....’ரக புகார்களும் வெளிவர துவங்கியுள்ளன. சர்வதேச அளவிலான சில ஆண் மாடல்களின் இணையதள பக்கங்களை நித்தி ஃபாலோ செய்வதுடன், அவர்களை அழைத்தும் சந்திக்கிறாராம். இதனால் அவருக்கு ‘ஓரின சேர்க்கையில் ஆர்வம் இருக்கிறது புலனாகிறது’ என்று  கொளுத்திப் போட்டுள்ளது ஒரு டீம். 

ஏற்கனவே நித்தியானந்தாவின் கோட்டைகளுக்குள் இளம் பெண்களுக்கு பாலியல்  தொந்தரவுகள் நடக்கிறது, பெண்கள்  சில விஷயங்களில் மயக்கப்பட்டு செக்ஸ் அத்துமீறல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்! என்றெல்லாம் புகார்கள் வந்து விழுந்தது தெரிந்த சேதியே. இந்த சூழலில் இப்படி  நித்தியின் ஆண் மோகம் ! என்றும் சர்ச்சைகள் வெடிப்பது பிடதி ஆசிரமத்தை கலங்க வைத்திருக்கிறது. கூடவே ‘நித்யானந்தா டீமை சேர்ந்த சிலருக்கு சர்வதேச அளவில் மனித உடல் உறுப்புகளை கடத்தும்  தரப்புடன் லிங்க் இருக்கிறது.  ஆசிரம தரப்பில் மர்மமாக இறக்கும் நபர்களின் உடலின் உறுப்புகள் களவாடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வலுக்கிறது. சமீபத்தில் இறந்த சதீஷின் உடலை போலீஸிடம் ஒப்படைக்காமல், வாரணாசிக்கு கொண்டு சென்று ரகசியமாக எரித்தது ஏன்? அவர் உடம்பிலிருந்து முக்கிய பாகங்கள் திருடப்பட்டது எனும் புகார் உண்மைதானா? இதற்கு நித்யானந்தாவின் தரப்பு விளக்கமளிக்க வேண்டும்.’ என்று மேலும் மேலும் கொளுத்தி விடப்படுகின்றன விமர்சனங்கள். 

நித்யானந்தா ஆசிரமத்தில் சட்டத் தரப்போ “மொபைலும், லேப்டாப்பும் இருக்கிறது என்பதற்காகவும், இலவச இன்டர்நெட் கிடைக்கிறது என்பதற்காகவும் எதை வேண்டுமானாலும் டைப் செய்து சோஷியல் மீடியாவில் போடுவதா? ஒரு வரம்பில்லையா வதந்தி கிளப்பிட? சர்வதேசம் முழுவதும் பல லட்சம் சீடர்களை கொண்டிருக்கும், தனது  தொடுதலின் மூலம் கொடூர நோய்களையும் குணப்படுத்தும் ஒரு மகானான நித்யானந்தா சுவாமிகளை இப்படித்தான் என்றில்லாமல் அசிங்கப்படுத்த நினைக்கிறார்கள் தமிழ்நாட்டில். இந்த வதந்திகள், பொய் குற்றச்சாட்டுக்களை வன்மையாக மறுக்கிறோம், கண்டிக்கிறோம். ஆதாரமில்லாமல் பேச வேண்டுமென்றால் யாரைப்பற்றியும், எதையும் பேசலாம்.” என்கின்றனர். நித்தி சீரியலுக்கு ஒரு முடிவே இல்லாமல் ஓடுகிறது........