காலம் காலமாக சூட்கேஸில் கொண்டு வரப்படும் பட்ஜெட் உரை முறையை மாற்றி, இந்திய பாரம்பரிய முறைப்படி சிவப்பு நிற துணியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொண்டு சென்றார். அடிமைத்தனத்தின் வெளிப்பாடு சூட்கேஸ் என்பதால் இந்த மாற்றம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்றது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் அள்ளி வீசப்பட்ட சலுகைகள் தற்போது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடம் எழுந்துள்ளது. 

இந்நிலையில், சிவப்பு நிறத்தில் சேலை அணிந்திருந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை எடுப்பதற்காக நிதி அமைச்சகத்துக்கு வந்தார். இந்த நிலையில் சிவப்பு நிறத்தில் சேலை அணிந்திருந்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை எடுப்பதற்காக நிதி அமைச்சகத்துக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், நிதித்துறை செயலாளர் எஸ்.சி. கார்க், உள்ளிட்டோர் பட்ஜெட்டை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர்.

 

அவர் நாடாளுமன்றத்துக்கு புறப்படுவதற்கு முன்னர் பட்ஜெட் வைத்திருந்த பையை செய்தியாளர்களுக்கு காண்பித்தார். பிரிட்டிஷ் காலத்தில் துவங்கிய இந்த பாரம்பரிய முறையை மாற்றி, தங்க நிறத்தில் இந்திய அரசு முத்திரை பொறிக்கப்பட்டு, இந்திய பாரம்பரிய முறையில் சிவப்பு துணியால் மடித்து மூடப்பட்டு (வடஇந்தியர்களின் கலாச்சார பண்பாடு) பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் கொண்டு வந்துள்ளார். இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.