Asianet News TamilAsianet News Tamil

Nilgiris : ராணுவ ஹெலிகாப்டர் விபத்து… படைத்தளபதி பிபின் ராவத் கதி என்ன..? பரபரப்பு தகவல்கள்..


குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

Nilgiris military helicopter accident
Author
Neelagiri, First Published Dec 8, 2021, 1:52 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் உள்ள ராணுவ மையத்தில் ஹெலிகாப்டர் மூலம் பயிற்சி மேற்கொண்டபோது, அடர் பனிமூட்டம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ராணுவ உயர் அதிகாரி வந்த இந்த ஹெலிகாப்டர் ஆனது விபத்தில் சிக்கி இருக்கிறது.இதில்  3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். நான்கு பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Nilgiris military helicopter accident

சூலூர் விமானப்படை மைதானத்தில் இருந்து வெலிங்டன் சென்ற போது ஹெலிகாப்படர் விபத்தில் சிக்கியுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் விரைந்துள்ளார். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் 14 பேர் பயணம் செய்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பனி மூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது. 

இந்த ஹெலிகாப்டரில் யார் யார் பயணம் செய்தனர் என்பது பற்றி இன்னும் சற்று நேரத்தில் தகவல் வெளியாகும். விபத்து நடந்த இடத்தில் இருந்து 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டரில் யார் யார் பயணித்தனர், உயரதிகாரிகள் யாரும் பயணித்தார்களா என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.

Nilgiris military helicopter accident

இந்த விபத்து தொடர்பாக  பேசிய நீலகிரி ஆட்சியர் அம்ரித், ‘ விபத்தில் 14 பேர் பயணித்ததாகவும், 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அதில் பயணித்த ராணுவ உயரதிகாரி  நிலைமை என்ன ஆனது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை ‘ என்று தகவல் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios