NIA Raid : 40 இடங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனை.. கைப்பற்றப்பட்ட பணம் & பொருட்கள் என்னென்ன.? வெளியான தகவல்

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

NIA raid conducted at 40 places What are the seized money items Released information

கோவையில் கடந்த அக்டோபர் மாதம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் சிலிண்டர் வெடித்தது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் குண்டு வெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை வருகின்றனர்.

இந்த சூழலில் இன்று சென்னை, கோவை, நெல்லை, தென்காசி, மயிலாடுதுறை உள்ளிட்ட பல பகுதிகளில் என்ஐஏ சோதனை நடைபெறுகிறது. தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளை குறிவைத்து சென்னை, கோவை, தென்காசி உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

NIA raid conducted at 40 places What are the seized money items Released information

இதையும் படிங்க..Coimbatore : கோவை கொலை சம்பவம்.. 2 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ் - பரபரப்பு நிமிடங்கள் !!

சென்னையில் உள்ள கொடுங்கையூர், மண்ணடி, உள்ளிட்ட இடங்களிலும், திருநெல்வேலியில் டவுன் காரிக்கான்தோப்பு பகுதியில் உள்ள மன்சூர் என்பவரின் வீட்டிலும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல ஏர்வாடியிலும், தென்காசியின் அச்சன்புதூரிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியிலும் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் உக்கடம், குனியமுத்தூர், கரும்புக்கடை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் என்ஐஏ சோதனை நடைபெறுகிறது.

NIA raid conducted at 40 places What are the seized money items Released information

மேலும், பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படும் நபர்களின் வீடுகளில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடத்திய சோதனையில் ரூ.4 லட்சம் மற்றும் மின்னணு உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து என்.ஐ.ஏ தற்போது விளக்கமளித்துள்ளது.

அதன்படி இதுவரை 4 லட்ச ரூபாய் பணமும், பல்வேறு டிஜிட்டல் சாதனங்களையும் கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளது. அதுமட்டுமின்றி, கோவை, மங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் என்.ஐ.ஏ விளக்கமளித்துள்ளது. விசாரணையின் முடிவில் இன்னும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க..விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா.? சீமான் என்ன சொன்னார் தெரியுமா.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios