NGT bans chanting of mantras ringing of bells at Amarnath temple VHP calls it Tughlaki fatwa

அமர்நாத் குகை கோயிலின் சூழலியலை பாதுகாக்கும் வகையில் குகைக்கோயிலை அமைதி மண்டலமாக தேசிய பசுமைத்தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

மேலும் பனி லிங்கத்தை பக்தர்கள் நன்கு பார்த்து வழிபடும் வகையில் , பனிலிங்கத்திற்கு அருகில் உள்ள இரும்பு கம்பிகளை அகற்றுமாறும்,பனிலிங்கம் உள்ள பகுதியில் ஒலி எழுப்ப அனுமதி இல்லை என்றும் ஒலி மாசுவை தடுக்கும் வகையில் அப்பகுதியை அமைதி மண்டலமாக கடைபிடிக்கவேண்டும் எனவும் ப உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழலியல் ஆர்வலர் கவுரி மவுலேகி தொடர்ந்த வழக்கில் பசுமைத்தீர்ப்பாய தலைமை நீதிபதி சுதந்தர் குமார் இந்த உத்தரவை பிறப்பித்து இருக்கிறார்.

பனி லிங்கத்தை வழிபட வரும் பக்தர்கள் பனி லிங்கத்தை தடையின்றி தெளிவாக கண்டு வழிபட வசதிகள் செய்துதரப்பட வேண்டும். அதற்கான கட்டமைப்பு வசதிகளை செய்துதர வேண்டும் என்றும் அந்த உத்தரவில் அவர் கூறி இருக்கிறார்.