Asianet News TamilAsianet News Tamil

தாக்குதலுக்கு பயமில்லை….உடனடியாக தொடங்கிய அடுத்த கட்ட அமர்நாத் யாத்திரை…

next term amarnath yathra
next term amarnath yathra
Author
First Published Jul 12, 2017, 6:20 AM IST


லஷ்கர்-இ-தொய்பா போன்ற தீவிரவாத தாக்குதலுக்கு கொஞ்சமும் பயப்படாமல் அடுத்த கட்ட  அமர்நாத் யாத்திரை உடனடியாக தொடங்கியது. . இதன் ஒரு பகுதியாக 3,289 பக்தர்கள் நேற்றிரவு 25 குழுக்களாகப் புறப்பட்டனர்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில்  அமர்நாத் யாத்திரை சென்றுவிட்டு, சோனாமார்க் எனுமிடத்தில் இருந்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் ஒரு பேருந்தில் ஜம்முவுக்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர். அனந்த்நாக்கில் கானாபால் எனுமிடத்தில் அந்தப் பேருந்து வந்தபோது பயங்கரவாதிகள் திடீரென அதன்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் பயணித்த 7 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர்.

தீவிரவாத தாக்குதலில் பலியான 7 பேரின் குடும்பத்துக்கு தலா 7 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தீவிரவாத தாக்குதலும் சிறிதும் அஞ்சாமல் அடுத்த கட்ட யாத்திரை நேற்றிரவு தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக 3,289 பக்தர்கள் நேற்றிரவு 25 குழுக்களாகப் புறப்பட்டனர்.

மத்தியப் பிரதேசம் போபால் ரயில் நிலையத்தில் ஜம்மு-தாவி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் அவர்கள் தங்கள் புனித யாத்திரையை தொடங்கினர்.

ரயில் நிலையத்தில் உறவினர்களும் நண்பர்களும் அவர்களுக்கு மாலைகள் அணிவித்து விடை கொடுத்து அனுப்பி வைத்தனர். அமர்நாத் யாத்திரையைக் குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பது தெரிந்தும் இந்த யாத்திரையை மேற்கொள்வதன் மூலம்தான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை முறியடிக்க முடியும் என்று யாத்திரை சென்றவர்கள் தெரிவித்தனர்

Follow Us:
Download App:
  • android
  • ios