new women captain for kashmir foodball team...

ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆண்டு போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய இளம்பெண் ஒருவர் தற்போது கால்பந்து அணியில் கேப்டனாகியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் அப்ஷான் ஆசிக். இவர் அம்மாநிலத்தில் உள்ள பெண்கள் கால்பந்து அணி ஒன்றுக்கு கேப்டனாக இருந்து வருகிறார்.

அப்ஷான் நேற்று காஷ்மீர் முதலமைச்சர் மெஹபூபா முப்தியை சந்தித்து பேசினார் இதையடுத்து ஜம்மு -காஷ்மீரின் பெண்கள் கால்பந்து அணியின் கேப்டன் மற்றும் கோல்கீப்பர் ஆகியுள்ளார்

அப்ஷான். தனது 22 உறுப்பினர்கள் அடங்கிய கால்பந்து அணி, பயிற்சியாளர் சத்பல் சிங் கலா ஆகியோரோடு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் அவர் நேற்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் இந்திய விளையாட்டு கழகம் ஒன்றை காஷ்மீரில் தொடங்க வேண்டும் என சிங்கிடம் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

இந்நிலையில் இளம்பெண் அப்ஷான் ஆசிக் ஜம்முவில் கடந்த ஆண்டு போலீசார் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய பெண் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இந்த கல்வீச்சு சம்பவத்திற்கு வருத்தம் அடைந்துள்ளீர்களா? என செய்தியாள்கள் கேட்டபோது, போலீசார் ஒருவர் தகாத வார்த்தைகளை பேசினார் என்றும் . கால்பந்து மைதான பாதுகாப்பில் ஈடுபட்ட சக உறுப்பினர் ஒருவர் அடித்து தாக்கப்பட்டார் என்று தெரிவித்த அப்ஷான், அதனால் எழுந்த ஆத்திரத்தில் போலீசார் மீது கற்களை வீசி எறிந்தேன் என்று தனது தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறினார்.

ஆனாலும் போலீசார் மீது கல்வீசீய ஒருவர் கால்பந்து அணிக்கு கேப்டனா என சர்ச்சை எழுந்துள்ளது.