குஜராத்தில் XBB.1.5 என்ற புதிய வகை கொரோனா... அலர்ட்டான குஜராத் சுகாதாரத்துறை அதிகாரிகள்!!
XBB.1.5 என்ற புதிய வகை கொரோனா இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
XBB.1.5 என்ற புதிய வகை கொரோனா இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நாள்தோறும் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை அடுத்து அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தனித்து போட்டி! அமித்ஷாவின் மாஸ்டர் பிளான்! கர்நாடகா தேர்தலில் பாஜகவின் வியூகம் எடுபடுமா?
இந்த நிலையில் அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய XBB.1.5 என்ற புதிய வகை கொரோனா இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் XBB.1.5 என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் 40 சதவீதத்திற்கும் மேல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒமிக்ரானின் மற்றொரு உருமாறிய கொரோனா வைரஸாக இந்த XBB.1.5 அறியப்படுகிறது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் 186 பயங்கரவாதிகளைத் தீர்த்துக் கட்டிய ஜவான்கள்!
முந்தைய வகை கொரோனா வைரஸ்களை விடவும் இது 120 மடங்கு வேகத்தில் பரவும் என கூறப்படுகிறது. இந்த கொரோனா வைரஸ் உருமாறிக் கொண்டே இருப்பதோடு கொரோனா தடுப்பூசிக்கும் அடங்காது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய வகை XBB.1.5 தொற்று குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு குஜராத் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.