Asianet News TamilAsianet News Tamil

ஜம்மு காஷ்மீரில் 186 பயங்கரவாதிகளைத் தீர்த்துக் கட்டிய ஜவான்கள்!

ஜம்மு காஷ்மீரில் 2022ஆம் ஆண்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த 56 பேர் உள்பட் மொத்தம் 186 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

56 Pakistanis among 186 terrorists killed, 159 arrested in J&K in 2022: DGP
Author
First Published Dec 31, 2022, 6:09 PM IST

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடப்பது வாடிக்கையாகியுள்ளது. ஆண்டு முழுவதும் இந்திய ராணுவத்தினரும் காவல்துறையினரும் அவர்களை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இச்சூழலில் 2022ஆம் ஆண்டு முழுவதும் நடைபெற்ற பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டைகள் பற்றிய புள்ளிவிவரத்தை ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் தில்பாக் சிங் வெளியிட்டுள்ளார்.

சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தில்பாக் சிங், ஜம்மு காஷ்மீர் காவல்துறை சரியான திசையில் நகர்ந்துகொண்டிருக்கிறது என்றும் பயங்கரவாதிகளின் ஊடுருவல் இல்லாத நிலையை விரைவில் அடைய முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

2022 Rewind: இந்தோனேசியா ஜி20 உச்சி மாநாடும், இந்தியா நடத்தும் ஜி20 மாநாடும் ஒர் பார்வை

யூனியன் பிரதேசத்தில் ஓராண்டில் 186 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 56 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இது தவிர, பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 146 தாக்குதல்கள் பாகிஸ்தானில் திட்டமிட்டவை என்று கணிக்கப்பட்டுள்ளன.

ஓராண்டில் 100 இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் இணைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை பல ஆண்டுகளுக்குப் பின் வெகுவாகக் குறைந்துள்ளது. பலர் பயங்கரவாத அமைப்புகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இப்போது சுமார் நூறு அல்லது அதற்கும் குறைவான பயங்கரவாதிகள்தான் தேடப்படும் பட்டியலில் உள்ளதாவும் போலீசார் தகவலி இருந்து தெரிகிறது.

கவுண்டமணி டயலாக் பேசி மோடிக்கு ஆறுதல் சொன்ன மம்தா

Follow Us:
Download App:
  • android
  • ios