new ten rupees note
அதிகமான பாதுகாப்பு அம்சங்களுடன், புதிய 10 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு விடப்படும் என்று ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதே சமயம், ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் 10 ரூபாயும் செல்லுபடியாகும் எனவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது-

கடந்த 2005ம் ஆண்டு வெளியிடப்பட்ட மகாத்மா காந்தி சீரிஸ் 10 ரூபாய் நோட்டுகளில் ஆங்கிலத்தில் ‘எல்’ என்ற எழுத்து அச்சிடப்பட்டு வெளியிடப்படும். அதோடு புதிய கவர்னர் உர்ஜித்படேல் கையொப்பமும் இருக்கும். ரூபாய் நோட்டின் பின்புறத்தில் அச்சிடப்பட்ட ஆண்டு இருக்கும்,

மேலும், ரூபாயின் வலது பக்கத்தில் வரிசை எண்கள் ஏறு வரிசையில் அச்சிடப்பட்டு இருக்கும். இந்த கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட புதிய ரூ.10 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும்.அதேசமயம், ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளும் செல்லுபடியாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
