மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு புதிய பொறுப்பு… பாஜக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

2024 லோக்சபா தேர்தல்களை எதிர்கொள்ள ஏதுவாக, முன்னாள் முதல்வர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்களை மாநில தேர்தல் பொறுப்பாளர்களாக பாஜக நியமித்துள்ளது. 

new responsibility for central minister prakash javadekar announced by bjp

2024 லோக்சபா தேர்தல்களை எதிர்கொள்ள ஏதுவாக, முன்னாள் முதல்வர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்களை மாநில தேர்தல் பொறுப்பாளர்களாக பாஜக நியமித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அமைச்சர்களாக இருந்த பிரகாஷ் ஜவடேகர் கேரளாவுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்... மனமுடைந்த மாணவி விபரீத முடிவு!!

அதேபோல் மகேஷ் சர்மா திரிபுராவுக்கு மாநில பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் மத்திய தேர்தல் குழு உறுப்பினரான ஓம் மாத்தூர் சத்தீஸ்கருக்கும், உத்தர பிரதேச தேர்தல் குழு தலைவர் லக்ஷ்மிகாந்த் பாஜ்பாய் ஜார்க்கண்டுக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கோஹினூர் வைரம் இந்தியா திரும்ப வேண்டும்.. ட்விட்டரில் மன்னர் குடும்பத்தை விளாசும் நெட்டிசன்கள் !

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பஞ்சாப் மற்றும் சண்டிகருக்கும், திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் தேப் குமார் ஹரியானாவுக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களின் ஒருங்கிணைப்பாளராக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios