2025-ம் ஆண்டுக்கான புதிய வீட்டு வாடகை விதிகள், டெபாசிட் தொகையை இரண்டு மாத வாடகைக்கு கட்டுப்படுத்துகிறது. இந்த விதிகள் வாடகைதாரர் மற்றும் வீட்டு உரிமையாளர் இருவருக்கும் பாதுகாப்பை வழங்குகிறது.

பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் வீட்டை வாடகைக்கு எடுக்கச் செல்வோருக்கு மிகப்பெரிய சிக்கல் இருந்தது “டெபாசிட்”. சில இடங்களில் 6 மாதம், 10 மாதம், கூட வருட வாடகையை முன்கூட்டியே செலுத்த சொல்லும் நிலை இருந்தது. 2025 வீட்டு வாடகை விதிகளின்படி, இனிமேல் அதிகபட்சம் இரண்டு மாத வாடகைத் தொகை மட்டுமே டெபாசிட் பெற முடியும். இதற்கு மேல் ஏதும் கேட்பது சட்டவிரோதம். இது சர்வதேச ரீதியில் உள்ள நடைமுறைக்கு இந்தியாவையும் நெருக்கமாக்குகிறது.

வாடகை ஒப்பந்தம் பதிவு அவசியம்

இறுதிவரை எழுதப்பட்ட ஒப்பந்தமே இல்லாமல், வாய்மொழி உடன்படிக்கையோ அல்லது சாதா பேப்பரில் எழுதப்பட்ட ஒரு ஒப்பந்தமோ வைத்துக்கொள்வது பல இடங்களில் பொதுவான நடைமுறை. புதிய விதிகள் இதை முற்றிலும் மாற்றுகின்றன. ஒவ்வொரு வாடகை ஒப்பந்தமும் 2 மாதத்திற்குள் பதிவு செய்யப்பட வேண்டும்.

பதிவு செய்யாவிட்டால் அபராதம்

ஒப்பந்தத்தை பதிவு செய்யாமல் தவறினால், ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். முந்தைய விதிமுறைகளில் திடீர் வாடகை உயர்வுகள் பொதுவானவை. புதிய விதிகளின் கீழ்:

- வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வாடகை உயர்வு அனுமதி.

- உயர்வுக்கு முன் 90 நாட்கள் (3 மாதம்) முன்பே அறிவிப்பு.

- மாத வாடகை ரூ.5,000-ஐ கடந்தால் டிஜிட்டல் முறையில் பெல்பேட் பணம் செலுத்த வேண்டும்.

- மாத வாடகை ரூ.50,000-ஐ மீண்டால் TDS கட்டாயம்.

இதனால், “அடுத்த வாரம் முதல் வாடகை அதிகரிக்கும்” போன்றவை அதிரடி செய்திகள் இனி இல்லை.

டிஜிட்டல் ரெண்ட் பேமெண்ட் கட்டாயம்

ரூ.5,000-க்கு மேல் வாடகை இருக்குமானால், UPI, நெட் பேங்கிங், NEFT, RTGS போன்ற டிஜிட்டல் வழிகளில் மட்டுமே செலுத்த வேண்டும் வேண்டும். பணம் கொடுத்ததாகச் சொல்வதில் ஏற்படும் குழப்பங்கள் இப்போது குறையும். இருவருக்கும் துல்லியமான பதிவுகள் கிடைக்கும்.

ரூ.50,000-ஐ கடந்த வீடுகள்

மாத வாடகை ரூ.50,000+ இருக்கும் வீடுகளில், TDS கட்டணம் கட்டாயம். உயர்ந்த வாடகை வீடுகளில் வரி விதிப்பை தெளிவாகப் பதிவு செய்வதே இதன் நோக்கம்.

முந்தைய ஓய்வற்ற தாமதங்கள் இனி இருக்காது. புதிய விதிகளின்படி:

- சிறப்பு வாடகை நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும்

- வழக்குகள் 60 நாட்களில் தீர்க்கப்பட வேண்டும்

வாடகைத் தொகை, டெபாசிட் திருப்பிக்கொடுக்காதது, வெளியேற்றம் போன்ற பிரச்சினைகள் பல ஆண்டுகள் நீளாமல் விரைவில் முடிவடையும்.