நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கையின்படி லிங்காயத் சமூகத்தை தனி மதமாக கர்நாடக அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. லிங்காயத் மதத்தை அங்கீகரிக்குமாறு மத்திய அரசுக்கு கர்நாடக அரசு பரிந்துரைத்துள்ளது. 

800 ஆண்டுகளுக்கு முன்பு பசவண்ணா என்பவரால் தான் லிங்காயத் மதம் உருவாக்கப்பட்டது. 12-ம் நூற்றாண்டில் வட கர்நாடகத்தில் உருவான வசனக்காரர்கள் இயக்கம் தான் லிங்காயத். லிங்காயத்துகள் தங்களை வீர சைவர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். சிவனை வழிபடும் லிங்காயத்துகள் வேதம், சாதி அமைப்புகளில் நம்பிக்கை இல்லாதவர்கள். 

கர்நாடகா மாநிலத்தில் தான் பெரும்பாலும் லிங்காயத்துகள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். வீர சைவ மடங்கள் கர்நாடகாவில் அரசியல், சமூக பிரச்சனையில் முக்கிய பங்கு வகித்து வகிக்கின்றன.

இந்நிலையில், நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கையின்படி லிங்காயத் சமூகத்தை தனி மதமாக கர்நாடக அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. லிங்காயத் மதத்தை அங்கீகரிக்குமாறு மத்திய அரசுக்கு கர்நாடக அரசு பரிந்துரைத்துள்ளது. 

கர்நாடகா சட்டப்பேரவைக்கு மே மாதம் தேர்தல் நடக்க உள்ள நிலையில் புதிய மதம் அறிவித்துள்ளார். லிங்காயத்துகளின் வாக்குகளை கவர முதல்வர் சித்தராமையா இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.