Asianet News TamilAsianet News Tamil

ஜிஎஸ்டி சந்தேகம் போக்கும் புதிய மொபைல் ஆப்…அறிமுகப்படுத்திய அருண் ஜெட்லி….

new mobile app for gst
new mobile app for gst
Author
First Published Jul 8, 2017, 9:28 PM IST

ஜிஎஸ்டி வரி குறித்த குழப்பத்தை பொது மக்கள் புரிந்து கொள்ளும் விதமாக புதிய மொபைல் ஆப் ஒன்றை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அறிமுகம் செய்து வைத்தார்.

ஒரே நாடு..ஒரே வரி என்ற அடிப்படையில் நாடு முழுவதும் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறு,சிறு வணிகர்கள், வாடிக்கையாளர்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினருக்கும் ஜிஎஸ்டி குறித்த  குழப்பங்களும் சந்தேகங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இது குறித்து மத்திய அரசு பல விளம்பரங்கள் மூலம் நாள் தோறும் அறிவிப்புகள் வெளியிட்டுக் கொண்டே இருந்தாலும், இது வரை ஜிஎஸ்டி குறித்து வணிகர்களுக்கும், பொது மக்களுக்கும்  தெளிவான புரிதல் இல்லை என்றே கூறப்படுகிறது.

ஏற்கனவே ஜிஎஸ்டிக்கான தனி டுவிட்டர் பக்கமும் தொடங்கப்பட்டு பதில் அளிக்கப்பட்டு வருகிறது. இதில்  முக்கியமானது எந்த எந்த பொருள்களுக்கு எவ்வளவு வரி என்ற குழப்பம்தான்.  

இந்நிலையில் மத்திய அரசு புதிய மொபைல் செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஜிஎஸ்டி ரேட்ஸ் ஃபைண்டர் (GST Rates Finder) என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொடங்கி வைத்தார்.

இந்த செயலியை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொண்டால் ஜிஎஸ்டி வரி எந்த பொருள்களுக்கு எவ்வளவு சதவிகிதம் வரி என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மத்திய சுங்கத் துறை தலைவர் வனஜா சர்னா மற்றும் சந்தீப் ராவல் ஆகியோர் கொண்டு குழு இந்த செயலியினை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios