new dropsi diseases spreading in up
கடுகு எண்ணெய் மூலம் புது வகையான நோய்க்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகி உள்ளனர்
உத்திர பிரதேச மாநிலம் ஜனூப்பூர் பகுதியில் வசித்து வருபவர்அசோக் குமார். இவருக்கு வயது 65. இவரது மனைவிக்கு கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி திடீரென காலில் வீக்கம் ஏற்பட்டு உள்ளது.
அதன் பின்னர் சில உடல் உபாதைகள் ஏற்பட்டு உள்ளது. வாந்தி வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி அதிகமாக இருந்துள்ளது.ஒரு கட்டத்தில் அவர் உயிர் இழந்துள்ளார்.
இவரை தொடர்ந்து, அதே நோயின் பாதிப்பால், அவரது மருமகள் மற்றும் குழந்தைகள் உயிர் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, நான்கு பேரை இழந்து வாடி வந்த அசோக்குமார் மற்றும் அவரது 4 வயது பேத்தி சுவாதியும் தற்போது இதே நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

"டிராப்சி"
டிராப்சி என கூறப்படும் இந்த நோயானது கலப்படம் செய்யப்பட்ட கடுடு எண்ணெய் மூலம் பரவுகிறது என தெரியவந்துள்ளது.
உத்திர பிரதேசத்தில் இந்த நோயானது கடந்த 2005 ஆம் ஆண்டு கடுமையான அளவில் பாதித்தால், சுமார் 75 பேர் உயிர்இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்த நோய் தலை எடுத்துள்ளது. கலப்படம் செய்யப் படும் கடுகு எண்ணெய் மூலம் பரவும் இந்த நோய்க்கு ஒரே குடும்பத்தில் நான்கு பேர் இறந்துள்ளதால் மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.
மேலும், இதனை பரவாமல் தடுக்க மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது
