நடா புயல் ஏமாற்றினாலும் மேலும் இரண்டு மூன்று காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை 

தொடர்ந்து ஏமாற்றிவரும் வடமேற்கு பருவமழை நடா புயல் காரணமாக சிறிது நம்பிக்கை ஊட்டியது . ஆனால் அதுவும் வலுவிழந்து ஒன்றும் இல்லாமல் இன்று கரையை கடந்துள்ளது. இதனால் சென்னையின் குடிநீர் ஆதார ஏரிகள் மற்றும் டெல்டா மாவட்ட விவசாயம் , ஏரிகளில் நீர் மட்டம் உயர்வது போன்றவையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக உருவாகி புயலாக மாறிய நடா ஏமாற்றினாலும் மேலும் இரண்டு அல்லது மூன்று காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது வரும் 4 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நம்பிக்கை ஊட்டியுள்ளது.