New control soon to buy gold jewelry
கருப்பு பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வதை தடுக்கும் வகையில், தங்கம், வைர நகைகள் வாங்குவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விரைவில் கொண்டு வரப்படும் என்று மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் அதியா தெரிவித்தார்.
ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் தங்கம் நகைகள் வாங்குவோரின் பான்கார்டு எண்ணை நகைக்கடை உரிமையாளர்கள் வருமான வரித்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் நீக்கியது. அதற்குள் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் முடிவுக்கு வந்துள்ளது.
இது குறித்து மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-
உத்தரவு ரத்து
கடந்த ஆகஸ்ட் 23-ந்ேததி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தங்கம் மற்றும் விலை உயர்ந்த கற்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வாங்குபவர்களின் பான்கார்டு எண்ணை வருமானவரித்துறையின் புலனாய்வுப் பிரிவுக்கு நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு பல குழப்பங்களையும், எதிர்மறையான உணர்வுகளையும் ஏற்படுத்தியது. மேலும், இதுவரை பலரும் அதுக்குறித்து முறையான கணக்கும் அளிக்கவில்லை.
மீண்டும் ஆய்வு
முதல்முறையாக நாட்டில் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், அது குறித்து நகைக்கடை உரிமையாளர்கள் அளித்த விவரங்கள் தெளிவாக இல்லை. ஆதலால், இந்த உத்தரவு குறித்து மீண்டும் ஆலோசித்து, முடிவு எடுக்க இருக்கிறோம்.
எங்களின் ஆகஸ்ட் 23-ந்தேதி உத்தரவு என்பது, நகைக்கடைக்காரர் ஒருவரின் விற்றுமுதல் ரூ.2 கோடிக்கு அதிகமாக இருந்தால் அது குறித்து வருமானவரித்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தோம். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் தங்க நகை வாங்கினால் பான் எண் தெரிவிக்க வேண்டும் என்பது பொதுவான விதி.
புதிய விதிமுறைகள்
இந்த உத்தரவால் எதிர்மறையான சூழல் நிலவியதையதால், குழப்பமான சூழல் உருவானது. ஆதலால், எவ்வளவு ரூபாய்க்கு மேல் நகை வாங்கினால், அது குறித்து வருமான வரித்துறைக்கு நகைக் கடை உரிமையாளர்கள் தெரிவிக்க வேண்டும் என்பதுகுறித்து ஆலோசித்து மீண்டும் புதிய விதிமுறைகளை அ ரசு அறிவிக்கும். இந்த சூழலை பயன்படுத்தி கருப்பு பணத்தை யாரும் தங்கமாக மாற்றிவிடக்கூடாது என்பதற்காக அரசு விரைந்து செயலாற்றி முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சட்டவிரோத பரிமாற்றம்
கடந்த 2002ம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச்சட்டத்தின்படி, நகைக் கடை உரிமையாளர்கள் ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக செய்யப்படும் பரிமாற்றங்கள், வெளிநாடுகளுக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் அனுப்பப்பட்ட பணப்பரிமாற்றங்கள், ரூ.50 லட்சத்துக்கு மேல் வாங்கப்பட்ட அசையா சொத்துகள் குறித்து வருமானவரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், வங்கிகள், நிதி நிறுவனங்களில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் செய்யப்பட்ட டெபாசிட்கள் குறித்தும் தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
