மத்திய பிரதேச, சத்தீஸ்கர் மாநில புதிய முதல்வர்கள் இன்று பதவியேற்பு.. பிரதமர் மோடி பங்கேற்பு..
பிரதமர் மோடி முன்னிலையில் மத்திய பிரதேச, சத்தீஸ்கர் முதல்வர்கள் இன்று பதவியேற்க உள்ளனர்.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களின் புதிய முதலமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய உளதுறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
230 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் 163 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. அதே போல் 90 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் தேர்தலில் பாஜக 54 இடங்களை வென்ற நிலையில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைபற்றியது. இதையடுத்து இந்த மாநிலங்களிலும் புதிய முதலமைச்சரை தேர்வு செய்யும் பணியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டது. அதன்படி சத்தீஸ்கரின் புதிய முதல்வராக விஷ்ணு தியோ சாய் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை மோகன் யாதவ் மத்தியப்பிரதேச முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இரு மாநிலங்களிலும் ஏற்கனவே முதலமைச்சர் பதவி வகித்தவர்களுக்கு பதில், புதிய தலைவர்களுக்கு பாஜக வாய்ப்பு வழங்கி உள்ளது.
இந்த நிலையில் இன்று மத்திய பிரதேச முதல்வராக மோகன் யாதவ், சத்தீஸ்கர் முதல்வராக விஜய் தேவ் சாய் ஆகியோ இன்று பதவியேற்க உள்ளனர். மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள ராம் பரேடு மைதானத்தில் பிரம்மாண்ட பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல் சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் உள்ள அறிவியல் கல்லூரி மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.இந்த பதவியேற்பு விழாக்களில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், முத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற் உள்ளனர். இதனால் இரு மாநிலங்களிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வர் மோகன் யாதவ்
58 வயதான மோகன் யாதவ் மூன்று முறை எம்எல்ஏவாகவும், ஓபிசியின் முக்கிய தலைவராகவும் உள்ளார். மோகன் யாதவ் ஆர்எஸ்எஸ்ஸுக்கு நெருக்கமானவர், 2013 ஆம் ஆண்டு உஜ்ஜைன் தெற்கில் இருந்து முதலில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் 2018 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளிலும் தொடர் வெற்றியை பதிவு செய்து தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார். எல்எல்பி, எம்பிஏ மற்றும் பிஎச்டி பெற்ற இவர் சிவராஜ் சிங் சவுகானின் அமைச்சரவையில் உயர் கல்வி அமைச்சராக இருந்தார்.
AI தொழில்நுட்பத்தை இந்தியா முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும்: பிரதமர் மோடி உறுதி
சத்தீஸ்கர் புதிய முதல்வர் விஷ்ணு தியோ சாய்
59 வயதான விஷ்ணு தியோ சாய் சத்தீஸ்கரின் முதல் பழங்குடியின முதல்வராக பதவியேற்கவுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் எம்.பி.யுமான விஷ்ணு தியோ சாய் முதலமைச்சராக பதவியேற்றதும், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த விஷ்ணு தியோ சாய்க்கு தேர்தல் அரசியலிலும், அடிமட்ட அளவில் பணிபுரிந்த பல வருட அனுபவமும் இருந்தாலும், அவருக்கு பொது விவரம் இல்லாததால், அவர் முன்னணி தலைவராக பார்க்கப்படவில்லை. விஜய் ஷர்மா மற்றும் அருண் சாவ் ஆகியோர் விஷ்ணு தியோ சாயின் துணைவர்களாக பணியாற்றுவார்கள். முன்னாள் முதல்வர் ராமன் சிங் சபாநாயகராக இருப்பார் என்று கூறப்படுகிறது.