new 200 rupees will be issued by reserve bank

சில்லறை தட்டுப்பாட்டைப் போக்கவும், பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும் புதிய 200 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதையடுத்து மைசூர் மற்றும் சல்போனியில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான அச்சகங்களில் 200 ரூபாய் நோட்டுக்கள் அச்சசிடும் பணி தொடங்கியுள்ளது.

கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.இதையடுத்து பொது மக்கள் தங்களிடம் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொண்டனர் அந்த நேரத்தில் பணத் தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் மிகுந்த அவதிப்பட்டனர்.

அதே நேரத்தில் புதிதாக 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டன. ஆனாலும் தொடர்ந்து தற்போது வரை பணத்தட்டுப்பாடு தொடர்ந்து கொண்டே வருகிறது.

மேலும் 2000 ரூபாய் நோட்டுக்களை சில்லறையாக மாற்ற முடியாமல் பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் சில்லறை தட்டுப்பாட்டைப் போக்கவும், பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும் புதிய 200 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

இதையடுத்து மைசூர் மற்றும் சல்போனியில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான அச்சகங்களில் 200 ரூபாய் நோட்டுக்களை அச்சசிடும் பணி தொடங்கியுள்ளது.

புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந் 200 ரூபாய் நோட்டுக்கள் பாதுகாப்பானதாகவும் , கள்ள நோட்டுக்கள் உருவாகாமல் தடுக்கும் வகையில் புதிய தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும் இந்த புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் புழக்கத்துக்கு விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது