நேப்பாளை சேர்ந்த பன்டனா நேபாள் என்கிற பெண் 126 மணி நேரம் நடனமாடி முந்தைய கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளார். இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஏற்கனவே கடந்த 2011ஆம் ஆண்டு, இந்தியாவை சேர்ந்த கலாமண்டலம் ஹேமலதா என்பவர், 123 மணி நேரம் 15 நிமிடம் நடனமாடியதே கின்னஸ் சாதனையாக இருந்தது.

இவரின் சாதனையை முறியடிக்கும் விதமாக, தற்போது நேபாள நாட்டைச் சேர்ந்த பன்டனா நேபாள், தொடர்ந்து 126 மணி நேரம் நடனமாடி புதிய கின்னஸ் சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இதனை உறுதிப்படுத்தும்  விதத்தில் கின்னஸ் சாதனை பிரதிநிதிகள் அவரிடம் அதற்கான சான்றிதழ்களை வழங்கினர்.  மேலும்பன்டனா நேபாள் நேப்பாள் பிரதமர் நேரில் சந்தித்து பரிசுகள் வழங்கி கௌரவித்துள்ளார்.