வெடித்தது சர்ச்சை.. கர்நாடக அரசு பத்திரிகை விளம்பரத்தில் சாவர்க்கர்.. நேரு போட்டோ புறக்கணிப்பு..!

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்நாடக அரசு நேற்று வெளியிட்ட பத்திரிகை விளம்பரத்தில் ஜவகர்லால் நேருவின் பெயரும், புகைப்படமும் புறக்கணிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது. 

Nehru Out, Savarkar In..karnataka government advertisement Controversy

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்நாடக அரசு நேற்று வெளியிட்ட பத்திரிகை விளம்பரத்தில் ஜவகர்லால் நேருவின் பெயரும், புகைப்படமும் புறக்கணிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது. 

நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதால் வீட்டுக்கு வீடு தேசியக் கொடி திட்டம் உட்பட பல நிகழ்ச்சிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த விழா அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்த மத்திய அரசு, விழாவை சிறப்பாகக் கொண்டாடுமாறு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டது. இதனால் நாடு முழுவதும் சுதந்திர தின விழாவை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க;- ராகுல் காந்தி வரிசையில் அரவிந்த் கெஜ்ரிவால்.. இவரும் பொருளாதார மேதை தான் - மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

Nehru Out, Savarkar In..karnataka government advertisement Controversy

இந்நிலையில், இல்லம் தோறும் மூவர்ணக்கொடி என்ற பிரசாரத்தின் ஒரு பகுதியாக  கர்நாடக அரசின் சார்பில் பத்திரிகைகளில் நேற்று விளம்பரம்  வெளியிடப்பட்டது. இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் உள்பட பல சுதந்திரப் போராட்ட தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றன. சாவர்க்கர் பெயரும், புகைப்படமும் இடம் பெற்றது. ஆனால், சுதந்திர போராட்ட தலைவர்களில் ஒருவரும், நாட்டின் முதல் பிரதமருமான  நேருவின் படம் இதில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இச்செயலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

Nehru Out, Savarkar In..karnataka government advertisement Controversy

இதுதொடர்பாக கர்நாடகத்தில் ஆளும் பாஜக இது பற்றி அளித்த விளக்கத்தில், நேருவால்தான் இந்தியா இரண்டாக பிளவுபட்டதாகவும் அதன் காரணமாகவே அவரது படம் புறக்கணிக்கப்பட்டதாக கூறியுள்ளனர். 

இதையும் படிங்க;-sonia gandhi covid: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios