ரத்தாகிறதா நீட் தேர்வு? NTA தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறியது என்ன? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

 நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்தப்பட வேண்டும், கருணை மனுக்கள் வழங்கியது போன்றவற்றுக்கு எதிரான பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.  

NEET exam cancelled? Affidavit filed by the National Examinations Agency.. Hearing in the Supreme Court today

நீட் நுழைவுத்தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில் இதுதொடர்பான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது. 

அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வினை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அந்த வகையில்,  2024-25 கல்வியாண்டுக்கான இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5ஆம் தேதி நடத்தப்பட்டு ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதையும் படிங்க: Fancy Car Number :சொன்னா நம்பமாட்டீங்க! ரூ.23 லட்சத்துக்கு விற்பனையான கார் பதிவு எண்!

ஆனால், தேர்வு முடிவுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக தேர்வு எழுதிய மாணவர்கள் குற்றம் சாட்டினார். வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், தேர்வு எழுதியவர்களில் 1536 பேருக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டது, இதுவரை இல்லாத அளவுக்கு 67 பேர், 720 என்ற முழு மதிப்பெண்களை பெற்றது, குறிப்பாக ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் 720 / 720 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்திருப்பது என நீட் தேர்வு முடிவுகள் தேசிய அளவில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்தப்பட வேண்டும், கருணை மனுக்கள் வழங்கியது போன்றவற்றுக்கு எதிரான பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது நீட் தேர்வு தொடர்பாக நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். 

இந்நிலையில் தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், நீட் வினாத்தாள் தேர்வு மையங்களில் பூட்டுகள் எதுவும் உடைக்கப்படவில்லை. அங்குள்ள சிசிடிவி காட்சிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. அந்த ஒரு அசம்பாவித சம்பவமோ வினாத்தாள் கசிவோ நடைபெறவில்லை. மேலும் நீட் தேர்வை ரத்து செய்தால் பல லட்சம் மாணவர்களுக்கு அநீதி இழைப்பது போன்றது. ஆகையால் நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது.  தற்போதைய நீட் தேர்வில் சிறு தவறு நடந்துள்ளது.  நீட் தேர்வு வினாத்தாளை வல்லுநர் குழு தயாரிக்கிறது. நீட் தேர்வு தொடர்பாக 63 புகார்கள் பெறப்பட்டு 33 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 22 மாணவர்களுக்கு 3 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பன விபரங்கள் இடம்பெற்றிருந்தன.

இதையும் படிங்க: Neet Exam - UG Row | நீட் வினாத்தாள் கசிந்தது உண்மை! அது முழு தேர்வையும் பாதித்ததா? NTA-வுக்கு SC கேள்வி!

இந்நிலையில் தான் நேற்று தேசிய தேர்வு முகமை பிரமாண பத்திரம் தாக்கல் செய்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கூறி வரும் நிலையில் தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது. மேலும் நீட் தேர்வு தொடர்பான அனைத்து மனுக்களையும் அபராதம் விதித்து தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கின் இன்றைய விசாரணை என்பது மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios