neet exam application submit date extended

மருத்துவ பட்டப்படிப்புக்கான தேசிய தகுதி நுழைவு தேர்வான நீட் தேர்வுக்கு 5 நாள் கூடுதல் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ பட்டப்படிப்புக்கான தேசிய தகுதி நுழைவு தேர்வு ஆண்டு தோறும், சி.பி.எஸ்.இ. மூலம் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.
இந்த நுழைய தேர்வில் இருந்து சில மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்கள் தேர்வு மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. தற்போது நாமக்கல், வேலூர், நெல்லை ஆகிய மாவட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் நடைபெற உள்ள நீட் தேர்வு, மே 7ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் இன்று (மார்ச் 31) என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதில், ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தாலும், பலர் இதுவரை வரையில் விண்ணப்பம் செய்யவில்லை. இதனால், விண்ணப்பம் செலுத்தும் தேதியே கூடுதலாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
மேலும், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நீர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக 5 நாள் அவகாசம் அளித்து உத்தரவிட்டார். அதவாது, ஏப்ரல் 1 முதல் 5ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தேர்தல் கட்டணம் மற்றும் விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்வது முன்பு இருந்த அதே விதிமுறைகளின் படி இருக்கும் என தீர்ப்பளித்து.