2018ம் ஆண்டு, மார்ச் 31ந்தேதிக்குள் நேரடி உர மானியத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஏறக்குறைய 2 லட்சம் பாயின்ட் ஆப்சேல் (ஸ்வைப்பிங் எந்திரங்கள்)எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, மத்திய உரத்துறை இணை அமைச்சர் மன்சுக் எல் மண்டவியா பேசியதாவது-

விவசாயிகளுக்கு நேரடி உர மானியத் திட்டத்தை நாடுமுழுவதும் செயல்படுத்துவதற்காக ஏறக்குறைய 2 லட்சம் பாயின்ட் ஆப் சேல் எந்திரங்கள் உர விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மானிய விலையில் வழங்கப்படும் அனைத்து உரங்களும் சில்லரை விற்பனை கடைகளில் பொருத்தப்பட்டுள்ள, பாயின்ட் ஆப் சேல் எந்திரங்கள் மூலம் விவசாயிகளுக்கு  விற்பனை ெசய்யப்படும். இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள் ஆதார் கார்டு, கிசான் கடன் அட்டை, மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை மூலம் அடையாளம் காணப்படுவார்கள்.

இந்த நேரடி உர மானியத் திட்டத்தின் மூலம், 100 சதவீத மானியத்துடன்,  உர நிறுவனங்கள் மூலம், பல்வேறு வகையான உரங்கள்,  சில்லரை விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு, அவை பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

இந்த திட்டம் சோதனை முயற்சியாக 19 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டதில், 16 மாவட்டங்களில் வெற்றிகரமாக நடந்து வருகிறது. ஆதார் அடிப்படையிலும், மண் வள அட்டையும் ஒருங்கிணைக்கப்பட்டு பயனாளிகள் பிரிக்கப்படுவதால், இந்த திட்டம் வெற்றிககரமாக செயல்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு மிகவும் உரங்களை மானியவிலையில் வழங்குவதால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் கோடி செலவாிறது. இந்த உர நேரடி மானியம் என்பது வழக்கமான கியாஸ் மானியத்தைக் காட்டிலும் சிறிது வித்தியாசமானது. இந்த திட்டத்தின்படி, மானியங்கள் அனைத்தும் பயணாளிகளுக்கு செல்லாமல், நேரடியாக உர நிறுவனங்களுக்கு செல்லும்.